Friday, 30 Oct, 7.40 am தினச்சுவடு

தமிழ்நாடு
#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை .

இந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது . இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது ? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் .

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu
Top