MK Stalin - பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை அன்று சென்னையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், ஆளும் மாநில திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
140 கோடி இந்தியர்களும் தனது குடும்பம் என்றும்,
– 'நீங்கள் நலமா?' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுகவினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், மத்திய அரசு நேரடியாக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது என்றும் பேசினார்.
- அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி!
இது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தனது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். அதில், ஆம், தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கும்பத்தையும் கைதூக்கி விடும் ஆட்சி. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை தீர்த்து வைத்துள்ளோம்.
- காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!
சென்னைக்கு வந்த பிரதமர் கூறியது பொய். மாநில அரசு தலையீடு இன்றி நேரடியாக மத்திய அரசு மக்களுக்கு உதவிகள் செய்ததாக கூறுகிறார். அப்படி யாருக்கு நலத்திட்டங்கள் சென்றடைந்தன என கூற வேண்டும். 8 மாவட்டங்கள் 2 இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டது. 36 ஆயிரம் கோடிகள் நிவாரண பணிக்காக கேட்டோம். ஒரு ரூபாய் கூட பிரதமர் தரவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

