Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாஜகவில் அடுத்த விக்கெட்! விலகிய ஏ.ஜி.சம்பத்..அண்ணாமலை இயக்கத்தில் இணைகிறாரா?

பாஜகவில் அடுத்த விக்கெட்! விலகிய ஏ.ஜி.சம்பத்..அண்ணாமலை இயக்கத்தில் இணைகிறாரா?

சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த 24 மணி நேரமாக நடந்து வரும் அதிரடி திருப்பங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, 'wetheleader.org' என்ற இணையதளத்தோடு புதிய இயக்கத்தை ஆரம்பித்து 2031 சட்டமன்ற தேர்தலே இலக்கு என அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், பாஜகவில் அடுத்த விக்கெட் விழுந்திருக்கிறது.

யார் என்றால், தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் ஏ.ஜி. சம்பத், கட்சியில் இருந்து விலகுவதாக தனது அதிகாரப்பூர்வ கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஜி. சம்பத் தனது கடிதத்தில், "என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் கட்சி பணிகளைத் தொடர முடியவில்லை. எனவே அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் களத்தில் 'தனிப்பட்ட காரணங்கள்' என்பது வழக்கமான ஒரு ஃபார்முலா தான் என்றாலும், அண்ணாமலையின் நேரலை அறிவிப்பு வந்த அடுத்த நாளே இந்த ராஜினாமா நடந்திருப்பது தற்செயலானது அல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஏ.ஜி. சம்பத் வெறும் பெயரளவு நிர்வாகி அல்ல; புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், அந்த பகுதிகளில் வலுவான சமூக பின்னணியும், அடிமட்ட தொண்டர்கள் பலமும் கொண்ட ஒரு சீனியர் முகம். அண்ணாமலை தலைவராக இருந்த காலகட்டத்தில், அண்ணாமலையின் முடிவுகளுக்கு மிக உறுதுணையாக நின்றவர்களில் இவரும் ஒருவர்.

'wetheleader' இயக்கத்தில் இணைகிறாரா சம்பத்?

அண்ணாமலை தொடங்கிய இணையதளத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை இணைத்துக் கொண்டு ஆதரவு தெரிவித்து வரும் சூழலில், சம்பத்தின் அடுத்த நகர்வு என்ன என்ற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஒரு பக்கம் அண்ணாமலை தனது புதிய இயக்கத்திற்கான முக்கிய தூண்களை (Core Team) தற்போதே செட் செய்து வருகிறார்.

எனவே, ஒருவேளை அவருடைய இயக்கத்தில் ஏ.ஜி. சம்பத் இணைந்தால் அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் செல்வாக்குமிக்க முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அண்ணாமலைக்கு கிடைக்கும் 12 லட்சம் ஆதரவு என்பது ஒருபுறம் இருந்தாலும், கிரவுண்ட் லெவலில் கட்சியை கட்டமைக்க ஏ.ஜி. சம்பத் போன்ற சீனியர் தலைவர்களின் எக்ஸ்பீரியன்ஸ் அண்ணாமலைக்கு தேவை. எனவே, சம்பத்தின் இந்த விலகல், தமிழக பாஜகவிற்குள் அண்ணாமலை ஏற்படுத்திவிட்டுச் சென்ற புயலின் ஒரு புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.இருப்பினும், அண்ணாமலை இயக்கத்தில் ஏ.ஜி. சம்பத் இணைவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu