Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பலியிலிருந்து தப்பி அதிர்ஷ்டம்! வைரலான 'டொனால்ட் டிரம்ப்' எருமையின் கதை!

பலியிலிருந்து தப்பி அதிர்ஷ்டம்! வைரலான 'டொனால்ட் டிரம்ப்' எருமையின் கதை!

ங்கதேசம் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலியிடப்படவிருந்த அரிய வகை அல்பினோ எருமை ஒன்று, கடைசி நேரத்தில் உயிர் தப்பிய சம்பவம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

"டொனால்ட் டிரம்ப்" என்று அழைக்கப்பட்ட அந்த எருமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமுடியைப் போல பொன் நிற முடி கொண்டிருந்ததால் அந்தப் பெயரை பெற்றிருந்தது.

சுமார் 700 கிலோ எடை கொண்ட அந்த எருமை, பக்ரீத் பலிக்காக ஏற்கனவே விற்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன் அரிய தோற்றம் காரணமாக சமூக வலைதளங்களில் காணொளிகள் வைரலானதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உருவானது. பல பகுதிகளில் இருந்து மக்கள் நேரடியாக வந்து அந்த எருமையை பார்த்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமை அதிக கவனம் பெற்றதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு வங்கதேச உள்துறை அமைச்சகம் தலையிட்டது. உள்துறை அமைச்சர் சலாஹுத்தீன் அஹ்மத் உத்தரவின் பேரில், அந்த எருமையை பலியிடாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை வாங்கியவருக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டதுடன், தற்போது அந்த அரிய எருமை டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சாதாரணமாக பக்ரீத் காலங்களில் கால்நடைகள் வாங்கி பலியிடப்படுவது வழக்கமான ஒன்று என்றாலும், இந்த எருமை தனது வித்தியாசமான தோற்றத்தாலும் அமைதியான குணத்தாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. கடைசி சில மணி நேரங்களில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கை தற்போது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu