Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
போதைப்பொருள் கடத்தல் விவகாரம். விசிக நிர்வாகியை நீக்கிய கட்சி தலைமை!

போதைப்பொருள் கடத்தல் விவகாரம். விசிக நிர்வாகியை நீக்கிய கட்சி தலைமை!

VCK : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்கின், சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது தொடர்ந்து, கடந்த மாதம் 15ம் தேதி டெல்லி காவல்துறை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு டெல்லி உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருட்கள் மற்றும் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறை கைது செய்தது.

ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு..! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் (மெத்தம்பெட்டமைன்) பொருட்கள் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, இந்த போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் சினிமா திரைப்பட தயாரிப்பாளரும், திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக் இருப்பது தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல், ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம், நடிகர் மைதீன் உள்ளிட்ட சிலரது பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிபட்டது. எனவே, இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுக அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜெயலலிதா நகைகளை தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டாம்.. பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்கு சம்மன் அனுப்பியிருந்தும், அவர் ஆஜராகாமல் தலைமறைவானர். இதனால், ஜாபர் சாதிக்கை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டது.

மேலும், போதைப்பொரு கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரும் தலைமறைவானார் எனவும் கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

பாஜகவுக்கு தாமரை சின்னம் - தீர்ப்பு ஒத்திவைப்பு!

இதுதொடர்பாக விசிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டம், மையசென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu