Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
#BREAKING: இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா.!

#BREAKING: இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,38,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 3,617 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து 89,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu