Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுச்சேரி சிறுமி கொலை..! அலட்சியமாக செயல்பட்ட மேலும் 12 காவலர்கள் இடமாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை..! அலட்சியமாக செயல்பட்ட மேலும் 12 காவலர்கள் இடமாற்றம்

Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கூடுதலாக 12 காவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் இருவரும் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. கைதான இருவரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

– மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி

இந்த நிலையில் புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 11 காவலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 12 காவலர்களை இடமாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu