Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!

புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!

Puducherry : முதல்வர் ரங்கசாமி உத்தரவளித்ததை அடுத்து புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

கடந்த 2ம் தேதி புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் மாயமான 9 வயது சிறுமி, மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.

காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

அந்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது, ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமிக்கு செய்யப்பட்ட உடற்கூராய்விலும் உறுதியானது. இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.!

மறுபக்கம், சிறுமி கொலைக்கு நீதி வழங்க கோரி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.!

அதன்படி, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் காவல்துறையினர் உத்தரவளித்ததை அடுத்து சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதனிடையே, சிறுமியின் பெற்றோரை நேரில் அழைத்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu