Dailyhunt
என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்!

என்னோட சந்தோஷம் எல்லாம் போச்சு! கதறிய சிம்ரன்? வெளியான சீக்ரெட்!

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நிஜமான பெயர் ரிஷி பாலா தான். சினிமாவிற்குள் வருவதற்காக தன்னுடைய பெயரை சிம்ரன் என்று மாற்றிக்கொண்டார்.

இவருடைய நடனம் பலரும் கவர்ந்த காரணத்தால் அந்த சமயம் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்று கூட கூறலாம்.

அந்த காலத்தில் எல்லாம் ரசிகர்கள் இவருக்கு இடுப்பழகி என்ற பெயரையும் வைத்தனர். பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சிம்ரன் சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் இணைந்தார். பிறகு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து சிம்ரன் நடித்து வருகிறார்.

கணவருக்கு தொடர் சிக்கல்! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

இந்நிலையில், நடிகையாக இருக்கும் கஷ்ட்டத்தை வேதனையுடன் சிம்ரன் பேசிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிம்ரன் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு சாதாரணமாக ஒரு டீ கடையில் சென்று டீ கூட குடிக்கமுடியவில்லையாம். அவ்வளவு பயமாக இருக்கிறதாம். இப்படி தான் தன்னிடம் சிம்ரன் சொன்னதாக பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” நான் ஒரு முறை சிம்ரனை பேட்டி எடுக்க சென்றேன். அப்போது அவரிடம் நீங்கள் வாழ்வில் வேதனை படும் விஷயம் என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு சிம்ரன் என்னிடம் சொன்ன விஷயம் நான் தங்க கூண்டுல அடைச்ச கிளி போலதான் இருக்கிறேன். உங்களை போல ஒரு டீ கடையில் கூட டீ குடிக்க முடியவில்லை. ரிஷி பாலாவாக இருக்கும்போது நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன்.

நடிகையாக எப்போது வளர்ந்தேனோ அப்போதே என்னுடைய சந்தோசம் போய்ட்டு. அந்த அளவிற்கு எனக்குள் வேதனை இருக்கிறது. நான் இப்படியெல்லாம் இருக்கவே மாட்டேன் ரிஷி பாலாவாக இருக்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தேன். இப்போது அப்படி இல்லை என்று வேதனையுடன் சிம்ரன் பேசியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu