Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திமுக!

எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திமுக!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்றது.

234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில், 85.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத உயர் வாக்குப்பதிவு சதவீதமாகும்.மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தவெக, 34.92% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திமுக 24.19% வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக 21.21% வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.திமுக 164 தொகுதிகளில் போட்டியிட்டு 59 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் 73 தொகுதிகளை வென்றுள்ள நிலையில், திமுக தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், சட்டமன்றத்தில் திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்தத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டபோதும், பெரும் வாக்கு சதவீதத்தைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு (118) இன்னும் சில இடங்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் சமன்பாட்டை மாற்றியமைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu