Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இன்று முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்

இன்று முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 13-ஆம் தேதி )முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்போது சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ( ஜூலை 13-ஆம் தேதி )முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு .நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu