Dailyhunt
காவலரின் மீது ஏறிய ஆதவ் அர்ஜுனாவின் கார்!

காவலரின் மீது ஏறிய ஆதவ் அர்ஜுனாவின் கார்!

திருச்சி : கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் கட்சித் தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, மரக்கடை பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிரச்சாரம் முடிந்ததும் விஜய் புறப்பட்டுச் சென்ற பிறகு, தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது காரில் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி ஆயுதப்படை காவலர் சதீஷ் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இந்த விபத்தில் காவலர் சதீஷின் கால் எலும்பு முறிந்தது.கடும் வலியால் துடித்த காவலரை அங்கிருந்த தவெக தொண்டர்கள் உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது காவலர் சதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வேட்புமனு தாக்கல் மற்றும் பிரச்சாரத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது தவெக நிர்வாகியின் வாகனம் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக தரப்பில் இந்த விபத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர் சதீஷுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தவெகவினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu