Chengalpattu - செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதியன்று ஆண்டுவிழா நடைபெற்றது.
அப்போது அங்கு பயின்று வந்த எல்கேஜி பள்ளி மாணவியை இரு ஆசியர்கள் அங்குள்ள இருட்டு அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர்.
– புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!
இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, உடனடியாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 500 பேர் சமபந்தப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம்…அதிரடி உத்தரவு பிறப்பித்த புதுச்சேரி முதல்வர்.!
இதனை அடுத்து, நேற்று முன்தினம் இசைப்பயிற்சி ஆசிரியரான கூடுவாஞ்சேரி, நீலமங்கலத்தை சேர்ந்த காயேஷ்குமார் (வயது40) மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ராசையா (வயது 29) ஆகியோரை கூடுவாஞ்சேரி
இவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது அவர்களை சிறையில் அடைத்துள்ளனர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் அதிகாரிகள்.

