Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி

மம்தா பானர்ஜி படுகாயம்..! நெற்றியில் கடுமையான ரத்த காயங்களுடன் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி

Mamata Banerjee: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி படுகாயம் அடைந்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார்.

தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள்

வரும் மக்களவை தேர்தலில் 'இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ''நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் மம்தா பானர்ஜிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் அவர் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மம்தா விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

நெருங்கும் தேர்தல்! பாஜகவில் இணைந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியது குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் உள்ளன, மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu