திருவள்ளூர் :நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, "மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!" என்ற தலைப்பில், வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறவிருக்கிறது.
இந்த மாநாட்டை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையேற்க உள்ளார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில், நடைபெறவிருக்கின்ற மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று நேரில் சென்றார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " உலகில் உயிர்வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மரங்கள்தான் ஜீவாதாரம். மனிதர்களின்றி மரங்கள் உயிர் வாழும். ஆனால் மரங்கள் இல்லாமல், எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. மேலும், தன்னை பார்த்து குரைத்த வளர்ப்பு நாய்களை மாநாட்டில் இறக்கி விட்டு விடுவேன் எனவும் தவெக மாநாட்டை சுட்டிக்காட்டி கிண்டல் செய்தார்.
இந்த மாநாடு சுற்றுச்சூழல் மற்றும் நில உரிமைகள் குறித்து தெளிவான அரசியல் பார்வையுடன் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாகும், முன்னதாக ஆடு-மாடுகளின் மாநாடு மற்றும் கள் இறக்கும் போராட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து.
