Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!

நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..!

திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அறிவிக்க இன்னும் சில நாட்களுக்கே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதிகள் பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தல ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

அதே நேரத்தில் பாஜக, அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைக்க உள்ளனர். இதற்காக மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழக மாநில காங்கிரஸ் கட்சி நேற்று பாஜகவில் இணைந்தது.

இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து ஜான்பாண்டியன் கட்சி விலகியது. அதிமுகவில் இருந்து விலகி ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைகிறது. பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu