Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'நியூ அமெரிக்கா' எனப் பெயர் மாற்றுங்கள்! ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!

'நியூ அமெரிக்கா' எனப் பெயர் மாற்றுங்கள்! ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தின் பெயரை 'நியூ அமெரிக்கா' என்று உடனடியாக மாற்ற வேண்டும் எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

நாம் மெக்சிக்கோ கிடையாது, அமெரிக்கா என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ள அவர், இந்த புதிய பெயர் மாகாணத்திற்குப் பெரும் மதிப்பையும் பெருமையையும் தேடித்தரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பெயர் மாற்றத்தின் மூலமாக அங்குள்ள வீடுகளின் சந்தை மதிப்பு மற்றும் மக்களின் தனிநபர் வருமானம் உயரும் என்றும், அது மக்கள் தங்களின் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தும்போது கூடுதல் பெருமிதத்தை அளிக்கும் என்றும் அவர் விரிவாகக் கூறியுள்ளார்.

மேலும், அதிபர் ட்ரம்ப் முன்னதாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' (Gulf of America) என்றும், ஒண்டாரியோ ஏரியாவை 'அமெரிக்க ஏரி' (Lake America) என்றும் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த புதிய யோசனையை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு நாட்டின் அதிபரால் மாகாணத்தின் பெயரைத் தன்னிச்சையாக மாற்ற முடியாது என்பதால், இதற்கு அந்த மாகாணத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த பெயர் மாற்றக் கோரிக்கைக்கு நியூ மெக்சிகோ மாகாண ஆளுநர் மிஷெல் லுஜான் கிரிஷாம் மற்றும் உள்ளூர் மக்கள் தரப்பில் இருந்து தங்களின் வரலாற்று அடையாளத்தை மாற்ற முடியாது எனப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu