Dailyhunt
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கத்தை காட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிரடியாகக் குறைந்த நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்தது.

இன்றும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,850க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த உயர்வு ஏற்கனவே குறைந்திருந்த விலையில் இருந்து ஏற்பட்டது.இன்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் உயர்வு நகை பிரியர்களையும், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கும் நிலையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலவரம், டாலர் மதிப்பு, பொன் தேவை மற்றும் உள்ளூர் சந்தை காரணிகளைப் பொறுத்து அடிக்கடி மாற்றமடைவது வழக்கம். தற்போதைய நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்குவதற்கு காத்திருக்கும் மக்கள் சற்று சிரமத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu