Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சுட்டெரிக்கும் வெயில்...புதுச்சேரியில் பள்ளிகள் எப்போது திறப்பு?

சுட்டெரிக்கும் வெயில்...புதுச்சேரியில் பள்ளிகள் எப்போது திறப்பு?

புதுச்சேரி : கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியை புதுச்சேரி அரசு தள்ளிவைத்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் தற்போது ஜூன் 4ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மட்டுமல்லாமல் காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் இதே உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்திருந்தது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், கோடை வெயில் மேலும் நீடித்தால் அடுத்தடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 4க்கு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியிலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu