Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தபால் வாக்கு எண்ணிக்கை : 9 மணி நிலவரப்படி த.வெ.க முன்னிலை!

தபால் வாக்கு எண்ணிக்கை : 9 மணி நிலவரப்படி த.வெ.க முன்னிலை!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய நிலையில், காலை 9:20 மணி வரை 158 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 71 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 48 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

நாம் தமிழர் கட்சி (நாதக) எந்தத் தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பல தொகுதிகளில் முன்னிலை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய போக்கின்படி தவெக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் அமைத்துள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழு முடிவுகளும் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தமிழக அரசியலை எவ்வாறு மாற்றும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu