Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தசரா 2026 : இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுங்க...பரிசு வெல்லுங்க - டி.கே. சிவக்குமார்

தசரா 2026 : இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுங்க...பரிசு வெல்லுங்க - டி.கே. சிவக்குமார்

கர்நாடகா : உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் (Reels) வீடியோக்களை வெளியிடும் சிறந்த படைப்பாளர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.

சிவக்குமார் அறிவித்துள்ளார். கர்நாடகாவின் பாரம்பரியமிக்க தசரா பண்டிகையை உலக அளவில் கொண்டு சேர்க்கும் நோக்கிலும், இணையதள உள்ளடக்க உருவாக்குநர்களை (Content Creators) ஊக்குவிக்கும் வகையிலும் இந்த புதிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளான அரண்மனை மின்விளக்கு அலங்காரம், ஜம்போ சவாரி யானைகளின் ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், கண்கவர் ட்ரோன் ஷோ மற்றும் தசரா கம்பளா எருமைப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை வீடியோக்களாகப் பதிவு செய்து பொதுமக்கள் ரீல்ஸாக வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உருவாக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மைசூரு தசரா-2026 என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தைக் குறியீடு (Tag) செய்ய வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பதிவிடும் இந்த வீடியோக்களில் இருந்து மிகவும் சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் உருவாக்கப்படும் 100 சிறந்த ரீல்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

இந்த 100 வெற்றியாளர்களுக்கும் கர்நாடக அரசின் சார்பில் பிரத்யேகப் பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படும் என்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது அறிவிப்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தற்போதைய டிஜிட்டல் தள படைப்பாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu