Dailyhunt
தோழர்களாய் ஒன்றிணைவோம்.முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!

தோழர்களாய் ஒன்றிணைவோம்.முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!

TVKParty: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார்.
அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

READ MORE – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!

அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற சட்டமன்ற தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, கட்சியின் உறுதி மொழியை படிங்க.. உங்களுக்கு பிடிச்சிருந்தா சேருங்க என்று பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியான மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

READ MORE – திமுக - மதிமுக தொகுதி பங்கீடு.! வேட்பாளர் யார்.? எந்த தொகுதியில் போட்டி.?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

READ MORE – திமுக - விசிக - மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.!

தலைவர் விஜய்யின் அறிவுரைபடி, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன்படி, மே மாதத்திற்குள் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும். உறுப்பினர் சேர்க்கைக்கு மகளிர் தலைமையில் தனி அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu