Dailyhunt
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பல குழப்பங்கள் - வைகோ

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பல குழப்பங்கள் - வைகோ

  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.
  • உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசு பல குழப்பங்களை செய்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது,.எனவே தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார்.

இதன் பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மோசடியான வகையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.இதனாலயே உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசு பல குழப்பங்களை செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டுமறுவரையறை செய்யவில்லை, இது மோசடி வேலை என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu