சென்னை : தமிழகத்தில் உள்ள 575-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் இதுவரை பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காக நேரில் சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
பொதுமக்களின் இந்த நீண்ட காலச் சிரமங்களைக் குறைத்து, சேவைகளை எளிய முறையில் வழங்குவதற்காகப் பதிவுத்துறை பல ஆண்டுகளாகத் பல்வேறு டிஜிட்டல் மாற்றங்களை மேற்கொண்டு வந்தது. அதன் உச்சகட்டமாக, தற்போது 'ஸ்டார் 3.0' (STAR 3.0) மென்பொருள் தமிழகம் முழுவதும் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஆன்லைன் பத்திரப்பதிவு முறையின் சிறப்பம்சங்கள் என்ன?
புதிய நடைமுறையின்படி, புதிதாக வீடு அல்லது மனை வாங்குவோர் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் (Builders), ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்களில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் நேர விரயம் முழுமையாகத் தவிர்க்கப்படுவதோடு, சேவைகளும் மிக விரைவாகக் கிடைக்கும்.
தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள்
இந்த நவீன டிஜிட்டல் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களில் சில முக்கியமான தொழில்நுட்ப வசதிகளைக் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் எனப் பதிவுத்துறை கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் (Apartment) முதல் வீடு வாங்குவோர் இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணைய வழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் இந்தப் புதிய புரட்சிகரமான நடைமுறையைத் தமிழக முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நவீன டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவைகள் மேலும் வெளிப்படையாகவும், ஊழலற்ற முறையிலும், பொதுமக்களுக்கு மிக எளிதாகவும் கிடைக்கும் எனப் பதிவுத்துறை வட்டாரங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன.

