Saturday, 23 Jan, 8.11 pm Filmyfocus Tamil

முகப்பு
"நீங்க இல்லன்னா நான் இல்ல". 'பிக் பாஸ் 4' பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவியில் 'உலக நாயகன்' கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 'சூப்பர் சிங்கர்' ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் முதலில் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் 'விஜய் டிவி' மற்றும் 'ஜீ தமிழ்' மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் 'உலக நாயகன்' கமல் ஹாசன் அறிவித்தார்.

தற்போது, மாடல் பாலாஜி முருகதாஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் "உங்க அன்புக்கு, உங்க ஓட்டுக்கு எல்லாத்துக்குமே ரொம்ப நன்றி. நீங்க இல்லன்னா நான் இல்ல. லைவ் கேட்டீங்க, லைவ் வர முடியல. அதுனால இந்த ஷார்ட் வீடியோவை வச்சுக்கோங்க. லவ் யூ" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Tweet

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Filmyfocus Tamil
Top