Thursday, 23 Jul, 4.10 am giriblog

News
facebook Status Bulk Delete எளிதாகச் செய்யலாம்

நி லைத்தகவல்களை எளிதாக நீக்க (facebook Status Bulk Delete) புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. சிலருக்கு இன்னும் இவ்வசதி வரவில்லை.

இவ்வசதி மூலம் நம்முடைய பழைய நிலைத்தகவல்களை மொத்தமாகத் தேர்வு செய்து எளிதாக நீக்க முடியும். ஒவ்வொன்றாக நீக்க வேண்டிய தேவையில்லை.

எதனால் நீக்க வேண்டும்?

நிலைத்தகவல்களை நீக்கப் பல்வேறு காரணங்கள் உள்ளன. Image & News Credit

சில நேரங்களில் எதோ ஒரு கோபத்தில் போட்டு இருப்போம், பின்னர் கோபம் குறைந்து யோசித்தால் தவறு என்று புரியலாம்.

அவசரத்தில் தவறான தகவல்களைப் பகிர்ந்து இருக்கலாம்.

அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற மனநிலையில் பகிர்ந்திருப்போம், தற்போது படித்தால் அர்த்தமற்றதாகத் தோன்றலாம்.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது

கல்லூரி முடித்து வேலை தேடுபவராக இருந்தால், சிக்கல் ஏற்படலாம்.

காரணம், தற்போது பணிக்கு எடுக்கும் முன்பு, நிறுவனங்கள் முன்பரிசோதனை செய்கின்றன. அதில் நம் சமூகத்தளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

இதில் உள்ள தகவல்கள் விவகாரமானதாகவோ, பிரச்சனையைக் கொடுக்கக்கூடிய நபர் என்ற தோற்றத்தைத் தந்தாலோ பணிக்கு எடுக்க மாட்டார்கள்.

அனைவரும் பார்க்கும்படியாக (Public) மாற்றவில்லை என்றாலும், நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் என்று எப்படியோ பிடித்து நுழைந்து பார்த்து விடுகிறார்கள். எனவே, இது சிக்கலானது.

இச்சூழ்நிலையில் பழைய தேவையற்ற நிலைத்தகவல்களை ஒவ்வொன்றாக நீக்குவது கடினம் என்பதால், மொத்தமாகத் தேர்வு செய்து நீக்க இவ்வசதி துணை புரிகிறது.

facebook Status Bulk Delete

Posts, Activity you are tagged in, Photos and Videos, Hidden from Timeline, Likes and reactions, comments, Games etc.. என்று Filter செய்து எளிதாக நீக்க முடியும்.

இதைப்பயன்படுத்த Activity Log சென்றால், மேற்கூறிய முறையில் கூடுதல் வசதிகளுடன் (Filter) நீக்க முடியும்.

நீக்கப்பட்ட நிலைத்தகவல்கள் Trash ல் 30 நாட்களுக்கு இருக்கும். விருப்பப்பட்டால், இதிலிருந்தும் உடனடியாக நீக்க முடியும், அதாவது துடைத்து வைக்க முடியும்.

இவ்வசதி தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Giri Blog
Top