Wednesday, 15 Jul, 4.15 am giriblog

News
இந்து கடவுள்களைக் கிண்டலடிக்கும் திக திமுகவினர்

திர்மறையாகக் கூறினால் கிடைக்கும் விளம்பரத்தால், பகுத்தறிவு என்ற பெயரில் இந்து கடவுள்களைக் கிண்டலடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது. Image Credit

இந்த நிலை தற்போதல்ல, தானே இப்படித்தான் இருந்தேன் என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களே 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம்

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசத்துக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்று படு ஆபாசமாக ஒருவர் விமர்சித்து, விளக்கம் கொடுத்து இருந்தார்.

எதிர்ப்பு கிளம்பியவுடன் அனைத்து ஆபாச காணொளிகளையும் Private செய்து விட்டார்கள். கந்த சஷ்டி விமர்சனத்தை நீக்கியே விட்டார்கள்.

ஒவ்வொரு பாடலுக்கும் இயற்றிய காரணம், சூழ்நிலை, காலம், எண்ணங்கள், விளக்கங்கள் என்று பல்வேறு காரணிகள் உள்ளது. எதுவுமே புரிந்துகொள்ளாமல் இவர் என்னமோ விளக்கம் கண்டுபிடித்தது போலப் பேசி உள்ளார்.

பாடலைக் கேட்கும், பாடும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் யாருமே, இது போல ஆபாசமாக நினைத்துப் பாடி இருக்க மாட்டார்கள் ஆனால், கேடுகெட்ட எண்ணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் தோன்றும்.

எண்ணங்கள் சிறப்பாக இருந்தால், நாம் காண்பதும் சரியாகத் தோன்றும் ஆனால், கேவலமான எண்ணங்கள் இருந்தால் பார்வையும் கேவலமாக இருக்கும்.

பல கோடி மக்கள் நம்பும் கடவுளை, கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் ஆபாசமாக மட்டுமே விமர்சிக்க முடியுமா? இதன் பெயர் தான் பகுத்தறிவா?!

திமுக

திமுக தலைவர் ஸ்டாலினாக இருந்தாலும், அவர் கட்சியினராக இருந்தாலும் (அனைவரும் அல்ல) இந்துக்களை, அவர்களது வழக்கங்களை, கடவுளைக் கிண்டலடிப்பதையே ஒரு வேலையாக வைத்துள்ளார்கள்.

கறுப்பர் கூட்டத்துக்கு அபார ஆதரவு!

அவர்கள் பகுத்தறிவுக்கு ஆதரவு கொடுத்தால், விமர்சிக்க ஒன்றுமில்லை ஆனால், கடவுளை ஆபாசமாக விமர்சிப்பதை கண்டிக்காமல் ஆதரவு கொடுப்பதோடு, கேள்வி கேட்கும் இந்துக்களைச் சங்கிகள் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

இனி இந்துக் கடவுளை வணங்கினாலே சங்கி என்று கூறுவார்கள் போல.

நேபாள் பிரதமர்

நேபாள் பிரதமர் சும்மா இல்லாம அவர் பங்குக்கு, ராமன் நேபாளில் பிறந்தார் என்று கூற, உடனே இந்தக் கூட்டம் #நேபாளி_ராமன் என்று ட்ரெண்டிங் செய்து ராமனை ட்ரோல் செய்து மிக மோசமாகக் கிண்டலடித்து வருகிறார்கள்.

இந்துக் கடவுள்கள் என்றால், என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், கேலி சித்திரம் வரையலாம், ஆபாசமாகச் சித்தரிக்கலாம் அவை கருத்துச் சுதந்திரத்தில் வரும்.

ஆனால், ஏன் இப்படி ஆபாசமா கடவுளைப் பேசுகிறாய்? ஆபாசமா கேலி சித்திரம் வரைகிறாய்? என்று கேட்டால், கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது.

கொஞ்சம் பொறுமையாக யோசித்துக் கண்ணாடியில் இவர்கள் முகத்தைப் பார்த்தால். இவர்களே தங்கள் முகத்துல பொளிச்சுனு துப்பிடுவாங்க.

எங்கே பிறந்தால் என்ன?

'எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?' என்று ராமரை கலைஞர் நக்கலடித்தார். இதற்கு என்ன தற்போது நேபாள் கல்லூரியில் படித்தார்னு சொல்வார்களா?!

ராமரே இல்லைனு சொல்ற இவர்களுக்கு அவர் இந்தியால பிறந்தால் என்ன? நேபாள்ல பிறந்தால் என்ன? கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு ஏன் அந்தக் கவலை?!

ராமர் இல்லை என்பது, நம்பாமல் இருப்பது தனிப்பட்ட விருப்பம். அதற்கு நம்புகிறவர் நம்பிக்கையை ஏன் கிண்டலடிக்க வேண்டும்?! மட்டமான எண்ணம் தானே!

புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து இவர்கள் தற்போது செய்து கொண்டு இருப்பதெல்லாம், ஒரு காலத்தில் வினையாக முடியும் போது காலம் கடந்து இருக்கும்.

தமிழகத்தில் பாஜக குட்டிக்கரணம் அடித்தும் செய்ய முடியாத ஒரு செயலைத் திகவும் திமுகவும் போட்டி போட்டுச் செய்து கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு நிச்சயம் வரலாற்றில் இடம் உண்டு!

தொடர்புடைய கட்டுரைகள்

ஸ்டாலினின் இந்து மத எதிர்ப்பு

தமிழகத்தில் பாஜக ஏன் வெற்றி பெற முடியவில்லை?

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Giri Blog
Top