Wednesday, 05 Aug, 4.48 am giriblog

News
UPI பரிவர்த்தனையைச் சுத்தலில் விடப்போகும் NPCI

ணையப் பணப் பரிவர்த்தனையில் UPI என்ற மிகப்பெரிய புரட்சியைக் கொண்டு வந்த NPCI நிறுவனம் தற்போது கடுப்படிக்கும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதிகபட்சம் 33% பரிவர்த்தனை

ஒரே நிறுவனம் தன் கட்டுப்பாட்டிலேயே (Monopoly) அனைத்தையும் வைத்துக்கொள்ள முடியாதபடி, மொத்த பரிவர்த்தனையில் 33% மட்டுமே அதிகபட்சம் வைத்துக்கொள்ள முடியும் என்று NPCI (National Payments Corporation of India) கூறியுள்ளது.

செயல்படுத்திய பிறகு, முதல் வருடம் அதிகபட்சம் 50%, இரண்டாம் வருடம் 40%, மூன்றாம் வருடம் 33% என்று இறுதி செய்யப்படும். Image Credit

அதிகபட்சம் ஒரு நிறுவனம் 33% சந்தையை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

அபராதம்

எடுத்துக்காட்டுக்கு ஒட்டுமொத்த UPI பணப்பரிவர்த்தனையில் Google Pay தற்போது 42% பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கிறது.

பின்னர் 33% க்கு மேல் பணப்பரிவர்த்தனையை Google Pay அனுமதிக்க முடியாது. புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது. அனுமதித்தால் NPCI அபராதம் விதிக்கும்.

எனவே, Google Pay ல் பணம் அனுப்ப முடியவில்லை என்றால், அடுத்ததாக PhonePe, Amazon Pay, Paytm, BHIM செயலிகளைப் பயன்படுத்தி அனுப்ப வேண்டும்.

இன்னும் WhatsApp Pay, Apple Pay போன்றவை அனுமதிக்காக வரிசையில் உள்ளன.

Monopoly

ஒரு நிறுவனம் Monopoly யாக அமைந்து விடாமல் தடுக்க எடுக்கப்படும் முயற்சி என்றாலும், நிறுவனத்தின் பக்கம் இருந்தும் யோசிக்க வேண்டும்.

பில்லியன் கணக்கில் முதலீடு செய்து கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனமும், சாதாரண நிறுவனமும் ஒன்று என்றளவில் உள்ளது.

எப்படியிருந்தாலும் அனுப்ப முடியாதவர்கள் நம்ம செயலிக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று அடுத்தக் கட்ட நிறுவனங்கள் நினைக்க வாய்ப்புள்ளதே!

இதனால் சேவையில் தரக்குறைபாடு ஏற்படும்.

மற்ற நாடுகளின் முதலீடு

சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்து பணப்பரிவர்த்தனையைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக NPCI கருதுகிறது.

TikTok போன்ற பொழுதுபோக்கு செயலியாக இல்லாமல் நிதி சம்பந்தப்பட்ட செயலியாக இருப்பதால், இந்த எச்சரிக்கை அவசியம் இருப்பதாக NPCI கருதுகிறது.

நியாயமான காரணமாக இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த வேறு முறைகளைக் கையாண்டு இருக்கலாம்.

தற்போது வரை பேச்சு அளவிலேயே உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, முழுமையடையும் போது இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவார்கள் என்று நம்புகிறேன்.

கொசுறு

Google Pay பயன்படுத்த மிக எளிதாக இருந்தாலும், சில நேரங்களில் பணம் செல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே, தற்போது Amazon Pay தான் பயன்படுத்துகிறேன். அதோடு இதில் பணம் அனுப்பும் போது, ₹7 வரை Cash back கொடுக்கிறார்கள்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Giri Blog
Top