Tuesday, 21 Jul, 4.03 am giriblog

News
வனிதா வாயை மூடாத வரை பிரச்னைக்கு முடிவில்லை

டந்த சில வாரங்களாக வனிதா விஜயகுமார் திருமணத்தைப் பற்றிய காணொளி, மீம்கள் தான் சமூகத்தளங்களில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.

வனிதா திருமண நிகழ்ச்சி காணொளி அவராக வெளியிட்டதா அல்லது மற்றவர்களால் வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை. துவக்கத்தில் மீம்கள் நகைச்சுவையாகத் தோன்றினாலும் பின்னர் எல்லை மீறிச் சென்று கொண்டுள்ளது.

பொதுவில் வந்துவிட்ட எவருமே விமர்சிக்கப்படும் காலமாகி விட்டதாலும், வனிதாவும் இப்பிரச்சனையை சரியாகக் கையாள முடியாததாலும் அல்லது தெரியாததாலும் குடும்ப விஷயம் சந்தி சிரிக்கும் நிலையாகி விட்டது.

இவ்வளவு மோசமாகப் போனதுக்கு வனிதா முக்கியக்காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. Image Credit

புறக்கணிப்பே சிறந்தது

இதுபோலப் பிரச்சனைகள் வரும் போது அவற்றுக்குப் பதில் அளிக்காமல் புறக்கணிப்பதே பிரச்சனையைத் தவிர்க்கும். இவர் போல ஒவ்வொருவருக்கும் பதில் அளித்துக்கொண்டு இருந்தால், பிரச்சனை மேலும் வளர்ந்து கொண்டே செல்லும்.

சர்ச்சை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வனிதா நினைக்கிறாரா என்பதும் புரியவில்லை. யாரும் தங்கள் திருமண வாழ்க்கை பொதுவில் அசிங்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்பதால், வேண்டும் என்று செய்வது போலக் கருதவில்லை.

பதிலுக்குப் பதில் கொடுப்பதாக நினைத்து அவரையே அசிங்கப்படுத்திக்கொண்டுள்ளார்.

காட்டமான பதில்

திருமணப் பிரச்சனையையொட்டி கருத்து கூறும் பிரபலங்களுக்கு வனிதா காட்டமாகப் பதில் அளித்து வருகிறார். இவ்வாறு சண்டை போட்டுகொண்டு இருப்பது சாதாரண மக்களுக்குப் பொழுதுபோக்காக மாறியுள்ளது.

எனவே, சண்டை காணொளிகளைப் பார்த்துச் சிரித்து, மீம் உருவாக்கி வருகிறார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை ஆனால், பொதுவில் குழாயடி சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால், சேதாரம் சம்பந்தப்பட்டவருக்குத் தான்.

அடுத்தவர் தனிப்பட்ட விஷயம் என்றால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதும், பொதுவில் ஆபாசமாக விமர்சிப்பதும் பலருக்கும் எளிதாகி விட்டது.

வனிதாவின் முன்னாள் கணவரின் நண்பர்கள் கூறியதாகத் தகவல்களைப் விகடன் போட்டு, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நிம்மதியிழக்க வைக்கிறார்கள்.

பொதுவில் வந்துவிட்ட பிரச்சனையை விமர்சிப்பதும், கிண்டலடிப்பதும் இயல்பு என்றாலும், இதையே வேலையாக வைத்து இருப்பது எரிச்சலையே தருகிறது.

வனிதா வாயை மூடாத வரை, இப்பிரச்னைக்கும் முடிவில்லை.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Giri Blog
Top