Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி!

7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி!

மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தீவிர விசாரணை

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருட்கள் பெறப்பட்ட மூலத்தைக் கண்டறியவும், இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil