Dailyhunt
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது...! எச்சரிக்கும் ஈரான்

மெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு "ஒரு பெரிய அதிர்ச்சி" காத்திருப்பதாக ஈரானிய பாதுகாப்பு தரப்பு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் "சிரிப்புக்குரியவை" என்றும்இ அவை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உள்ளிட்ட "அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் தோல்விக்கு" ​​ஒரு பதிலடி என்றும் அவர் குறிப்பட்டுள்ளார்.

கடுமையான நடவடிக்கைகள்

இதேவேளை, 48 மணி நேரத்திற்குள் ஈரான் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், அதன் மீது "கடுமையான நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஒரு உடன்பாடு எட்ட அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க இரண்டு நாட்கள் அவகாசம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரானில் எஃப்-15 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்நாட்டின் வான்பரப்பில் விமானத்திலிருந்து வெளியேறியதாக நம்பப்படும் அமெரிக்க விமானியைத் தேடும் பணி குறித்து அவர் கருத்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil