Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்!

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்!

ரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது இராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கு சமமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானின் பொருளாதாரம்

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த முற்றுகை நடவடிக்கையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்து பெசெஷ்கியன் மேலும் தெரிவிக்கையில், இந்த ஒடுக்குமுறை அணுகுமுறை தொடர்வது சகித்துக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.

தனது எதிர்ப்பு மற்றும் சுதந்திரத்திற்காக ஈரான் தகுந்த விலையை கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் முற்றுகையை அசாத்தியமானது என வர்ணித்துள்ள நிலையில் பெசெஷ்கியனின் இந்த அறிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil