Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்

மெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஹேக்கிங் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'QScan' மற்றும் 'QTRouter' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் டொமைன்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க எரிசக்தித் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா - தென் கொரியாவைச் சேர்ந்த 4 தனியார் நிறுவனங்களும் இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னணியில் சீனாவின் உளவு அமைப்பு

இந்த ஹேக்கிங் தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நான்ஜிங் சின்ஜியுவே நெட்வொர்க் டெக்னாலஜி' (Nanjing Xinjiuwei Network Technology Company) என்ற நிறுவனம் இயக்கி வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக சீனாவின் உளவு அமைப்பான அரசுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகியவை செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil