Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் கூட்டு எதிர்க்கட்சி!

ரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரின் அடுத்த கருத்தரங்கு மாத்தறையில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி இக்கருத்தரங்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடைய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (04) கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது குறித்த கருத்தரங்கு தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு குறித்த கலந்துரையாடலில் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மாத்திரமன்றி முழு எதிர்க்கட்சியினதும் தலைவராகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil