2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நோக்கம்
தற்போது நாடளாவிய ரீதியில் 8,990 பாடசாலைகளைச் சேர்ந்த 15 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாடசாலை போசாக்குத் திட்டத்தை வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமாக மட்டுப்படுத்தாமல், நாட்டின் சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விரிவான வேலைத்திட்டமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

