Dailyhunt
பல பகுதிகளுக்கு சுழற்சிமுறையில் நீர்வெட்டு

பல பகுதிகளுக்கு சுழற்சிமுறையில் நீர்வெட்டு

IBC தமிழ் 0 months ago

ற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக, நீர் வெட்டை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (02) முதல் 10ஆம் திகதி வரை பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவலை கொழும்பு சுற்றியுள்ள பல பகுதிகளில், ஒரு நாளைத் தவிர, இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு நீர் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேர நீர் வெட்டு அமல்படுத்தப்படும்

இதற்கிடையில், பதுக்கா, ஹோமகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இரவு 08.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமல்படுத்தப்படும் என்று NWSDB தெரிவித்துள்ளது.

நீண்டகால நீர் விநியோகத் தடையைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகத் தடைக்குப் பிறகு மூன்று நாட்களுக்கு நீர் விநியோகம் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil