பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் இம்மூன்று மாணவிகளும், மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பலாங்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
திருகோணமலையில் அடையாளம்
அதன்போது, காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த மாணவிகள் மூவரும் திருகோணமலையில் நின்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை நபர் ஒருவர் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

