Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்ட நீர்கொழும்பு கைதிகள்!

பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்ட நீர்கொழும்பு கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் 5 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இடநெருக்கடி

400 கைதிகள் பராமரிக்க கூடிய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 960 கைதிகள் பல இடநெருக்கடிகளுக்குள் இருந்து வரும் நிலையில் மேலும் நீர்கொழும்பு சிறையில் இருந்து 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதையடுத்து ஆயிரத்து 20 கைதிகள் (1020) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலன்னறுவை சிறைச்சாலைக்கும் 63 கைதிகள் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil