Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பள்ளத்தில் வீழ்ந்த பாடசாலை வான் - மாணவர்கள் பலர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்த பாடசாலை வான் - மாணவர்கள் பலர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாவலப்பிட்டி - கெடபுலாவில் இன்று (05.05.2026) காலை 7 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 13 பேர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

இதன்படி 7 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil