Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பயங்கர ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினர் வசம் சிக்கிய பெண்!

பயங்கர ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினர் வசம் சிக்கிய பெண்!

ம்பஹா - கந்தான பகுதியில் உரிமம் இல்லாத துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வாள்களுடன் 53 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை விசேட அதிரடிப்படையினால் நேற்று(01) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

இந்த நிலையில், அதிகாரிகள் அந்த வீட்டிலிருந்து உரிமம் இல்லாத 12-போர் துப்பாக்கி, 27 தோட்டாக்கள் மற்றும் இரண்டு வாள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரான பெண் கந்தான காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil