Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்புபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்புபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை காவல்துறை திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாடு தழுவிய அளவில் காவல்துறையினர் இந்த விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வகப் பரிசோதனை

மேலும் சந்தேகத்திற்குரிய மேலும் பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

டீசல் லீற்றர்ர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால் கூடுதல் இலாபத்திற்காகப் பல பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர்.

இந்த சட்டவிரோதச் செயலால் பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று மாசுபாடும் ஏற்படுவதுடன் இலாப நோக்கம் இருந்தாலும் சுற்று சூழல் மாசடைவதுடன் வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது.

அத்துடன் கான்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது பயன்படுத்தவோ துணை போகக் கூடாது என காவல்துறை போக்குவரத்து பிரிவு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil