ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும, தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு அருகில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இறந்து போன எனது மகனின் பெயரில் தானம் வழங்குவதற்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றை அப்புறப்படுத்தச் சென்ற மத்துகமை பொலிஸார் சிலர், எனது மனைவியை தள்ளி விட்டதன் காரணமாக அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய வந்தேன்.இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.

