Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டிஜிட்டல் சேவைகளுக்கான VAT வரி ஜூலை வரை ஒத்திவைப்பு

டிஜிட்டல் சேவைகளுக்கான VAT வரி ஜூலை வரை ஒத்திவைப்பு

IBC தமிழ் 6 months ago

வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரி தொடர்பான விசேட சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த வரியை நடைமுறைப்படுத்துவதை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது VAT சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஒப்புதல்

மின் - வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் போன்ற சேவைகள் இந்த வரி வலைக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 1 முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. பின்னர் அது ஏப்ரல் 1 வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஜூலை 1 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கும் உலகின் சுமார் 120 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணையவுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையினர் இந்த வரியின் எல்லைகள் குறித்து எழுப்பியுள்ள சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பின்னரே இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil