Dailyhunt
ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை வைக்க பரிந்துரை

ட்ரம்பிற்கு அளவு கடந்த ஆசை : ஹோர்முஸ் நீரிணைக்கு தனது பெயரை வைக்க பரிந்துரை

ஹோர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை 'ட்ரம்ப் நீரிணை' என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இது, இணையத்தில் கேலியான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

ட்ரம்ப் பகிர்ந்த படம்

ஹோர்முஸ் நீரிணை, ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ளது. இது, பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவை இணைக்கிறது.

இந்த ஹோர்முஸ் நீரிணை என்பது, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகும்.

இந்த நீரிணை என்பது மிகவும் குறுகியதாகும். அதன் மிகவும் குறுகிய பகுதி, 33 கி.மீ., அகலம் மட்டுமே உள்ளது. அதிலும், கப்பல்கள் செல்லும் பகுதி, 3 கி.மீ., துாரம் மட்டுமே உடையவை.

ஹோர்முஸ் என்ற பெயர் வர காரணம்

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது.

ஹோர்முஸ் என்ற பெயர், அப்பகுதியில் 13 முதல் 16ம் நூற்றாண்டுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த பண்டைய துறைமுக நகரமான 'ஹோர்முஸ்' நகரிலிருந்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil