Dailyhunt
ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

ஈரான் விவகாரத்தில் சீனாவின் பங்கு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

ரான் போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான நகர்வுகள் நடந்துகொண்டிருந்த வேளையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மிக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதில் சீனா ஆற்றிய பங்கு குறித்துக் கேட்கப்பட்டபோது, "அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும், சீன அரசாங்கத்திற்கும் இடையே நேரடி உரையாடல்கள் நடந்தன" என்று அவர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவு

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மீது ஜனாதிபதி ட்ரம்ப் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த பணி உறவு நீடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

image Credit: Chatham House

இந்த நிலையில், ஈரான் போரின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ட்ரம்பின் சீனப் பயணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் சூழல் காரணமாக இந்தப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil