Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஈரானை மீண்டும் தாக்கத் தொடங்கிய அமெரிக்கா! தீவிரமடையும் மோதல்

ஈரானை மீண்டும் தாக்கத் தொடங்கிய அமெரிக்கா! தீவிரமடையும் மோதல்

மெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில், வணிகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் மீதும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவு, பண்டார் அப்பாஸ், சபாஹார், ஜாஸ்க் மற்றும் சிரித் ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் பதிலடி

இதேவேளை, ஈரான் மீண்டும் பதிலடி கொடுத்தால், இதனைக் காட்டிலும் மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்கா தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும் என்றும், இராஜதந்திர ரீதியிலோ அல்லது போர்க்களத்திலோ ஈரான் தனது முழுத் திறனையும் பயன்படுத்திப் போராடும் என்றும் ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்போரினால் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்பதால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் தீவிர விழிப்புடன் இருக்குமாறு கட்டாரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil