Dailyhunt
ஈரானின் U.S போர்விமானங்களின் வேட்டையாடல்! தப்பிய விமானியை தேடி போட்டி!

ஈரானின் U.S போர்விமானங்களின் வேட்டையாடல்! தப்பிய விமானியை தேடி போட்டி!

லங்கையில் நாளை மீண்டும் ஒருமுறை 2019 இன் குரூர நினைவுடன் உயிர்த்தஞாயிறு தினம் கடக்கவுள்ள நிலையில் தமிழர் விரோத கடும்போக்கு கொள்கை கம்பன்பில போன்றவர்களின் குண்டு தாக்குதல் பீதி மீளுருவாக்க கம்மாரிசு அடிகளும் அடிக்கப்படுகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் சதிகள் தொடர்பான மடிக்கனத்தை கொண்டுள்ளதாக பலமான சுட்டுவிரல் நீட்டப்படும் பிள்ளையான் போன்றவர்களை காப்பாற்ற பலமாக அசையும் கம்மன்பில போன்ற வகையாறா தொகையாறக்கள் என்னதான் நகர்ந்தாலும் இன்றுடன் தடுப்புக் காவல் காலம் முடிவடையவேண்டிய பிள்ளையானுக்குரிய பிணைத்திட்டங்கள் எல்லாம் பொய்த்து அவர் இரண்டாவது ஆண்டாகவும் இன்னொரு ஈஸ்டருக்கு உள்ளே இருக்க வேண்டிவந்துள்ளது.

சீட்டாட்டம் ஒன்றுக்கு பயன்படுத்தப்படும் இந்த கம்மாரிசு அடிகள் உள்ளூர் அரசியல் களங்களில் மட்டுமல்ல மத்தியகிழக்கு நிலவரங்கள் போன்ற போர்க்களங்களிலும் வந்துள்ளன.

ஈரானிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதால் இன்னும் 3 வாரங்களுக்குத்தான் அங்கு இராணுவவேலை உண்டு என அமெரிக்க அரச தலைவர் வாய்க்கொழுப்பால் வாயால் வடைசுட்ட 48 மணிநேரத்தில் அமெரிக்காவின் F-15 மற்றும் A-10 தண்டர்போல்ட் II ரக விமானங்களை சுட்டுவீழ்த்தி சில உலங்கு வானூர்திகளையும் சேதப்படுத்தி ஈரான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

இந்த சம்பவங்களில் ஒன்றில் காணாமல் போன விமானி ஈரானிடம் சிக்கினால் அது அதற்கு ஒரு முக்கிய துருப்பு சீட்டாக மாறறும் என்பதால் ஈரானிய தரப்பும் அமெரிக்க வான்படையின் போர்க்களத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை எலிட் அணிகளும் போட்டியான தேடுதல் களத்தில் உள்ளன.

புதிய ஆயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்க விமானங்களைத் தாம் வேட்டையாடி வருவதாக ஈரானிய படைத்துறை குறிப்பிட்டுள்ளமை ஈரானுக்கு புதிய ஆயுதங்கள் கிட்டியதான ஐயங்களை எழுப்பியுள்ளது.

எது எவ்வாறோ அடுத்தடுத்து ஒரே நாளில் இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டமை அமெரிக்காவுக்கு குழப்பத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பரபரப்பான புதிய கள ஆட்டங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு...

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil