Dailyhunt
ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ஈரானுக்குள் இருந்து சி.ஐ.ஏ-வுக்கு சென்ற பீக்கான் சமிக்ஞை! US-இன் காய்நகர்த்தல்

ரானுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஒரு மாதத்தை தாண்டிய போரில் அமெரிக்காவானது வரலாறு பேசும் ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.

இது அமெரிக்காவின் இராணுவ பலத்தையும், உளவுத்துறையின் நகர்வுகளையும் மீண்டும் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது எனலாம்.

அண்மையில் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் ஈரானுடைய பலத்தை அடிகோடிட்டிருந்தாலும், அதில் இருந்து தப்பித்து ஈரானுக்குள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் மறைந்து இருந்த விமானியை மீட்ட சம்பவம் HOLLYWOOD காட்சிகளையும் மிஞ்சியிருக்கும்.

F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அந்த விமானப்படை வீரரின் துயரம் தொடங்கியது. இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இத்தகைய முதல் சம்பவமாகும்.

ஒரு கட்டத்தில் ஈரான் அமெரிக்காவை திசை திருப்ப விமானியைப் பிடித்துவிட்டதாகவும், குழுவினரைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்குவதாகவும் கூறிய நிலையில் தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்த அமெரிக்கா அதில் இறுதியில் வெற்றிக்கண்டமையை விரிவாக ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்...

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil