Dailyhunt
எரிபொருள் நெருக்கடி:வெளிநாடொன்றில் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

எரிபொருள் நெருக்கடி:வெளிநாடொன்றில் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

த்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், செனகல் அரசு அமைச்சர்களின் அத்தியாவசியமற்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளது.

செனகல் பிரதமர் சோன்கோ நைஜர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்து, நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு

இந்தக் கட்டுப்பாட்டின் ஒரு நடவடிக்கையாக, செனகல் பிரதமர் தனது நைஜர் மற்றும் ஸ்பெயின் பயணங்களை ஒத்திவைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், அடுத்த வாரம் அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

அவரது அலுவலகமும் அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல ஆபிரிக்க நாடுகளைப் போலவே, செனகலும் தனது நுகர்வுக்காக பெரும்பாலான பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரு நாடாகும். மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கத்தையும் அது சந்தித்துள்ளது, இது கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil