Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு : ஈரான் புரட்சி படை 'பச்சைக்கொடி'

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு : ஈரான் புரட்சி படை 'பச்சைக்கொடி'

"ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால்" ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐ.ஆர்.ஜி.சி.) கடற்படை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பொருள் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், "ஈரானிய விதிமுறைகளுக்கு இணங்க ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதில் ஒத்துழைப்பு நல்கிய" கப்பல் உரிமையாளர்களுக்கு ஐ.ஆர்.ஜி.சி. நன்றி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாதுகாப்பான மற்றும் நீடித்த பயணத்திற்கான சாத்தியக்கூறுகள்

"ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவதாலும், புதிய நடைமுறைகளின் பின்னணியில், நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் நீடித்த பயணத்திற்கான சாத்தியக்கூறுகள் வழங்கப்படும்."

நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நோக்கில் தொடங்கப்பட்ட அமெரிக்க நடவடிக்கையான 'புராஜெக்ட் ஃப்ரீடம்' இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil